search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுகவினர் ஆர்ப்பாட்டம்"

    கொடநாடு விவகாரத்தில் முதல்வர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அவர் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுகவினர் இன்று ஆளுநர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #KodanadVideo #DMKProtest
    சென்னை:

    கொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. எனவே, முதல்வர் பதவி விலக வேண்டும் என திமுக வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் மனு அளித்தார். இந்த மனு மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காத நிலையில் போராட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் அறிவித்தார்.



    முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து விலகிட வேண்டுமென்றும், தமிழக ஆளுநர் முதல்வர் மீது அரசியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நேர்மையான ஐஜி தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக்குழுவை ஏற்படுத்தி மேல் விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி 24-ம் தேதி அன்று காலை 10 மணியளவில், சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதன்படி, ஆளுநர் மாளிகை நோக்கி இன்று காலை திமுக நிர்வாகிகள் புறப்பட்டுச் சென்றனர். ஆளுநர் மாளிகையை நெருங்கியபோது, போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து, திமுகவினரை தடுத்து நிறுத்தினர். ஆனால் திமுகவினர் தொடர்ந்து முன்னேறி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் செல்ல விடவில்லை. இதையடுத்து திமுகவினர் ஆளுநர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். #KodanadVideo #DMKProtest
    சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. #DMKprotest
    ஈரோடு:

    ஈரோடு தெற்கு மாவட்ட தி.முக சார்பில் கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை தாங்கினார்.

    தெற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான முத்துசாமி, மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி. பா. சச்சிதானந்தம், மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி. சந்திரகு மார், மாநகர செயலாளர் சுப்பிரமணியம்,

    மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் பழனிச்சாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.இ. பிரகாஷ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கோட்டை ராமு, கோட்டை பகுதி செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ‘வஞ்சிக்காதே வஞ்சிக்காதே தமிழக அரசே வஞ்சிக்காதே’, ‘திரும்ப பெறு திரும்ப பெறு சொத்து வரி உயர்வை திரும்ப பெறு’ ஆகிய கோ‌ஷங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.

    பின்னர் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வீட்டு வரி, வாடகை வீட்டு வரி, குப்பை வரி, தண்ணீர் வரி என இந்த அரசு வரலாறு காணாத அளவில் வரிகளை உயர்த்தி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. இந்த அரசு கையாளாகாத அரசாக உள்ளது என்பதை இது காட்டுகிறது.

    உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் தி.மு.க. வெற்றி பெறும் என்ற பயம் காரணமாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இந்த அரசு சாக்கு போக்கு சொல்லி வருகிறது.

    உள்ளாட்சி நிர்வாகம் முடங்கியதால் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ.3 ஆயிரத்து 500 கோடி வரவில்லை. சொத்து வரி உயர்வை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம் அறிவித்ததும் சொத்து வரியை 50 சதவீதமாக குறைத்துள்ளனர்.
     
    ஆனால் சொத்து வரி உயர்வை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும். ஒரு டெண்டர் எடுத்தால் அதன் மதிப்பு ரூ. 5 கோடி என்றால் இவர்கள் ரூ. 7 கோடியாக கணக்கு காட்டி அதன்மூலம் ரூ. 2 கோடி கொள்ளை அடிக்கிறார்கள். இப்படி இந்த அரசு ஊழல் நிறைந்த அரசாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #DMKprotest

    மதுரையில் சொத்து வரி உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மாநில அரசை கண்டித்து கோ‌ஷமிட்டனர். #DMKprotest
    மதுரை:

    அண்மையில் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரியை 100 சதவீதமாக உயர்த்தியது. இதற்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.

    சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

    அதன்படி இன்று மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் அம்பிகா தியேட்டர் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச்செயலாளர் தளபதி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ., முன்னாள் மேயர் குழந்தைவேலு, முன்னாள் எம்.எல்.ஏ. வேலுச்சாமி, மாநில மருத்துவரணி துணைத்தலைவரும், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினருமான டாக்டர் சரவணன்.

    நிர்வாகிகள் ஜெயராமன், அக்ரி.கணேசன், எஸ்ஸார் கோபி, மின்னல்கொடி, சின்னம்மாள், பொன்சேது மற்றும் தொண்டர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மாநில அரசை கண்டித்து கோ‌ஷமிட்டனர். #DMKprotest

    ×